இந்தியா

ராம்நாத் கோவிந்த் உடல்நிலை குறித்து விசாரித்தார் அமித் ஷா

26th Mar 2021 05:05 PM

ADVERTISEMENT

 

புது தில்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல்நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விசாரித்தார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 

குடியரசுத் தலைவரின் குடும்பத்தினருடன் பேசி அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன். அவரின் ஆரோக்கியத்துக்காகவும், நல்வாழ்விற்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார். 

ADVERTISEMENT

குடியரசுத் தலைவர் நெஞ்சுவலி காரணமாக வெள்ளிக்கிழமை ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT