இந்தியா

வாக்காளர் பட்டியலில் முறைகேடு: கேரள காங். புகார்

25th Mar 2021 01:25 PM

ADVERTISEMENT

கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி மாநிலத் தேர்தல் ஆணையத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி புகாரளித்துள்ளது.

ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருவனந்தபுரம் வட்டியூர்கவு தொகுதியில் போட்டியிடும் வீணா நாயர் இந்த புகாரை அளித்துள்ளார்.

கேரளத்தில் வாக்காளர் பட்டியல் நகலில் பெயர்கள் திரும்பத் திரும்ப வருவதாகவும், கேரள மக்கள் மாற்றத்தை விரும்புவதால், நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT