இந்தியா

அயோத்தி ராமர் கோயில்: விதர்பாவில் ரூ. 57 கோடி வசூல்

25th Mar 2021 12:46 PM

ADVERTISEMENT

 

அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்காக மகாராஷ்டிரத்தின் விதர்பாவில் உள்ள 27 லட்சம் குடும்பத்திடமிருந்து ரூ. 57 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி திரட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஆர்.எஸ். எஸ். அமைப்பினர் மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பாவில் நிதி திரட்ட அப்பகுதி மக்களை நாடியுள்ளனர். நிதி திரட்டியதில் அங்குள்ள 27 லட்சம் குடும்பங்களில் இருந்துரூ .57 கோடி நிதி சேகரிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த 7,512 பெண்கள் உள்பட 70,796 தன்னார்வலர்கள், விதர்பாவில் உள்ள 12,310 கிராமங்களில் உலா 27,67,991 குடும்பங்களையும் சந்தித்து ரூ .57 கோடி நிதி வசூலித்துள்ளதாக அந்த அமைப்பைச் சேர்ந்த தீபக் தாம்ஷெட்டிவார் தெரிவித்தார்.

ADVERTISEMENT

நாடு முழுவதும் இந்த இயக்கத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட மொத்த தொகை குறித்து எந்த தகவலும் தன்னிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

விதர்பா பிராந்தியத்தில் யவத்மால், அகோலா, அமராவதி, வர்தா, புல்தானா, வாஷிம், நாக்பூர், சந்திரபூர், பண்டாரா, கட்சிரோலி மற்றும் கோண்டியா என 11 மாவட்டங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Tags : ram temple
ADVERTISEMENT
ADVERTISEMENT