இந்தியா

'கரோனா அதிகமுள்ள 10ல் 9 மாவட்டங்கள் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவை'

25th Mar 2021 11:08 AM

ADVERTISEMENT

நாட்டில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 மாவட்டங்களில் 9 மாவட்டங்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளன. 

அதன்படி புணேவில் தற்போது 43,000க்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவிலேயே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் இதுவாகும். 

இதையடுத்து நாக்பூர், மும்பை, தானே, நாசிக், ஒளரங்காபாத், பெங்களூரு நகரம்,  நாந்தேடு, ஜல்கான் மற்றும் அகோலா ஆகியவை முறையே அடுத்த 9 இடங்களைப் பெற்றுள்ளன. இதில் பெங்களூரு தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்தும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவை. 

புதன்கிழமை நாட்டில் புதிதாக 47,262 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 31,855 பேர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

ADVERTISEMENT

மகாராஷ்டிரம், பஞ்சாப், குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT