சத்தீஸ்கரில் வாகனங்களுக்கு நக்சல்கள் தீ வைத்ததில் 12 வாகனங்கள் எரிந்தன.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பத்ராளி மற்றும் செர்பெடா இடையே பிரதமரின் கிராம் சதக் யோஜனா என்கிற திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனை பொருத்துக்கொள்ளமுடியாத நக்சல்கள் குய்மாரி கிராமத்தில் சாலை அமைப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு இன்று அதிகாலை திடீரென தீவைத்தனர். இதில் 12 வாகனங்கள் எரிந்தன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு பாதுகாப்புப்படையினர் விரைந்துள்ளனர்.