இந்தியா

மும்பை: முகக்கவசத்திற்காக ரூ.4.06 கோடி அபராதம் வசூல்

25th Mar 2021 11:36 AM

ADVERTISEMENT


மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.4 கோடியைத் தாண்டியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா வேகமாக பரவி வருவதால், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதத் தொகையும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே முகக்கவசம் அணியாதோரிடம் வசூலிக்கப்பட்டத் தொகை ரூ.4 கோடியைத் தாண்டியுள்ளது.

முகக்கவசம் அணியாமல் சென்ற 2,03,000 பேரிடம் ரூ.4.06 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

நாட்டிலேயே அதிகமான தொற்று பரவும் மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. நாடு முழுவதும் கரோனா அதிகம் உறுதி செய்யப்படும் 10 மாவட்டங்களில் 9 மாவட்டங்கள் மகாராஷ்டிரத்திலேயே உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT