இந்தியா

அமர்நாத் யாத்திரைக்கான பணிகள் தீவிரம்: 6 லட்சம் பக்தர்கள் எதிர்பார்ப்பு

25th Mar 2021 12:10 PM

ADVERTISEMENT

அமர்நாத் யாத்திரைக்கான பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்முறை 6 லட்சம் பக்தர்கள் பாதயாத்திரையாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளர் பி.வி.ஆர்.சுப்பிரமணியம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அமர்நாத் யாத்திரைக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள், பக்தர்களுக்கான வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மண்டல ஆணையர்கள்  யாத்திரைக்கான பணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். 

ADVERTISEMENT

குறிப்பாக யாத்திரைக்கான பாதைகள், கதுவா, ஜம்மு, உத்தம்பூர், ராம்பன், அனந்தநாக், ஸ்ரீநகர், பால்தல், சந்தன்வாரி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளார். 

56 நாள்களுக்கு நடைபெறும் இந்த யாத்திரை கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு ஜூன் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தாண்டு சுமார் 6 லட்சம் பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT