பொருள்களை கொண்டு செல்ல சைக்கிளை பயன்படுத்துங்கள் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதி கட்கரி, 'வெளியில் செல்வதற்கு, பொருள்களை எடுத்துச் செல்வதற்கு அனைவரும் முடிந்தவரை சைக்கிளை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் செலவினங்கள் குறைவது மட்டுமின்றி மாசுபாடு ஏற்படாது' என்று தெரிவித்தார்.
முன்னதாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பை அடுத்து மின்சார வாகனங்களை பயன்படுத்துமாறு அமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 8 ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் இரண்டாம் அமர்வு ஏப்ரல் 8 ஆம் தேதி நிறைவடைய இருந்தது. ஆனால், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அவை இன்று ஒத்திவைக்கப்பட்டது.