இந்தியா

ஸ்ரீநகரில் சிஆர்பிஎப் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: ஒருவர் பலி

25th Mar 2021 06:28 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் சிஆர்பிஎப் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியான நிலையில்  மூவர் காயமடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல்  விஜயகுமார் கூறுகையில், 'ஸ்ரீநகரில் வெளிப்புறத்தில் அமைந்துள்ள லவேபுரா பகுதியில் வியாழனன்று சென்று கொண்டிருந்த சிஆர்பிஎப் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் திடீரென்று  துப்பாக்கிச்சூடு நடத்தினர்; இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் மூவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை  நடத்தி வரும் வேளையில் மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.         

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT