பஞ்சாபில் புதிதாக 2,700 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பஞ்சாபிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,700 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,22,937-ஆக அதிகரித்துள்ளது.
பஞ்சாபில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 21,405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதிதாக 1,735 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,95,015-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 43 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 6,517-ஆக அதிகரித்துள்ளது.