தில்லியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 1515 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,52,742 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 903 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 5 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,36,267 பேர் குணமடைந்துள்ளனர், 10,978 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய தேதியில் 5,497 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.