மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 200க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் என மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மேற்குவங்கத்தின் சட்டப்பேரவைக்கான தேர்தல் மார்ச் 27 முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக என மும்முனை போட்டி நிலவி வருகின்றது.
மேற்கு வங்கத்தில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற பாஜகவின் பல்வேறு தேசிய தலைவர்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், “மேற்கு வங்கத்தில் அமையவிருக்கும் அரசு ஜனநாயகத்தின்படி செயல்பட வேண்டும். ஏதேச்சதிகாரத்தின் படி அல்ல” எனத் தெரிவித்தார்.
மேலும், “நடைபெற உள்ள மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக 200 இடங்களுக்கும் மேலான இடங்களில் வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.