இந்தியா

உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் கரோனா சிகிச்சைக்காக தில்லி பயணம்

25th Mar 2021 03:48 PM

ADVERTISEMENT

காங்கிரஸ் தலைவரும், உத்தரகண்ட் முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத் கரோனா சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பயணம் மேற்கொள்கின்றார். 

உத்தரகண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு ஹரீஸ் ராவத் தனது சுட்டுரை பதிவில் பதிவிட்டுள்ளார். 

மருத்துவர்களின் ஆலோசனையின்படி கரோனா சிகிச்சை மேற்கொள்ள அவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பயணம் மேற்கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT