இந்தியா

அதிகரிக்கும் கரோனா பரவல்: புதுச்சேரியில் மே 31-வரை பள்ளிகள் மூடல்

22nd Mar 2021 05:08 PM

ADVERTISEMENT

 

சென்னை: மாநிலத்தில் அதிகரிக்கும் கரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் மே 31-வரை பள்ளிகள் மூடபடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை தலைமையிலான கரோனா தடுப்புக் குழுக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன.

மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் மே 31-வரை ஸ்டேட் போர்டு , சிபிஎஸ்ஈ  மற்றும் ஐசிஎஸ்ஈ என அனைத்து விதமான பள்ளிகளும் மூடப்படுகிறது  

ADVERTISEMENT

அதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்றும், இந்த வகுப்புகள் வாரத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த முடிவுகளை புதுச்சேரி மாநில உயர்கல்வித்துறை இயக்குநர்  ருத்ரா கவுட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT