உத்தரகண்ட் முதல்வர் திரத் சிங் ராவத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முகக்கவசம், சமூக இடைவெளி, கரோனா பரிசோதனை, கரோனா தடுப்பூசி என மாநிலங்கள் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
அரசியல் தலைவர்கள் சிலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வரும் நிலையில், உத்தரகண்ட் முதல்வர் திரத் சிங் ராவத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
கரோனா பரிசோதனையில் எனக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நான் நலமாக இருக்கிறேன். எந்த பிரச்னையும் இல்லை. மருத்துவர்களின் மேற்பார்வையில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
கடந்த சில நாள்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், கரோனா பரிசோதனை செய்துகொள்ளவும்
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.