புது தில்லி: கூடுதல் ரேஷன் அரிசி வேண்டும் என்றால் 20 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியதுதானே? என்ற உத்தரகண்ட் முதல்வர் திரத் சிங் ராவத்தின் பேச்சு மிகுந்த சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திரத் சிங் ராவத் கூடியிருந்த மக்களிடையே பேசும்போது கூறியதாவது:
குடுமபத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து கிலோ அரிசியினை அரசு வழங்குகிறது. அப்படிப் பார்த்தால் இரண்டு பேர் உள்ள குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி வழங்கப்படும்; அதேநேரம் 20 பேர் கொண்ட குடும்பத்திற்கு 100 கிலோ அரிசி வழங்கப்படும்.ஆனால் அதன்பிறகு ஒரு குடும்பத்திற்கு மட்டும் 10 கிலோ; மற்றொருவருக்கு 100 கிலோ என அவர்களுக்கு இடையே பொறாமை உண்டாகிறது. முன்பு ஒரு காலத்தில் நீங்கள் குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டீர்கள். அதேசமயம் கூடுதல் ரேஷன் அரிசி வேண்டும் என்றால் 20 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியதுதானே?
இவ்வாறு அவர் பேசினார்.
அவரது இந்தப் பேசிச்சு மீண்டும் சர்ச்சையினை உருவாகியுள்ளது.
இந்த மாதம் 10-ஆம் தேதி மாநில முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட திரத் சிங் ராவத் தனது பேச்சுக்களால் தொடர்ந்து சர்சையில் சிக்கி வருகிறார். கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள் குறித்த பேச்சு, பிரதமர் மோடியினை ராமருடன் ஒப்பிட்டது என அவர் பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது.
இதே நிகழ்ச்சியில்தான் அமெரிக்கா இந்தியாவை ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வைத்திருந்தது என்று திரத் சிங் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.