இந்தியா

தெலங்கானாவில் புதிதாக 337 பேருக்கு கரோனா

22nd Mar 2021 11:27 AM

ADVERTISEMENT

 

தெலங்கானாவில் புதிதாக இன்று 337 பேருக்கு கரோனா  தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், 

கடந்த 24 மணி நேரத்தில் 337 பேருக்குத் தொற்று பரவியுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 3,03,455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

ஒரேநாளில் 2 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1671 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,958 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

கடந்த 10 நாள்களில் பள்ளிகளின் மூலம் அதிக எண்ணிக்கையிலான தொற்று பரவி வருவது குறிப்பிடத்தக்கது. 

மார்ச் 21-ம் தேதி நிலவரப்படி 37,079 சோதனைகள் மேற்கொண்ட நிலையில் நாட்டில் இதுவரை 2,98,826 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Tags : தெலங்கானா Telangana
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT