இந்தியா

காபூலில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு சம்பவங்களில் 7 பேர் பலி: 3 பேர் காயம்

22nd Mar 2021 12:03 PM

ADVERTISEMENT

 

காபூலில் 24 மணி நேரத்தில் பல்வேறு சம்பவங்களில் ஏழு பேர் பலியாகியுள்ளனர். மூன்று பேர் காயமடைந்தனர். 

காபூலில் சாஹர் ஆசியாப் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சாலையோர குண்டுவெடிப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். 

நேற்றிரவு காபூலில் பாக்ராமி மாவட்டத்தில் ஏற்பட்ட மற்றொரு சாலையோர குண்டுவெடிப்பில், காவல்படை அதிகாரி கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் காயமடைந்தார். 

ADVERTISEMENT

மேலும், காபூலின் பாக்மான் மாவட்டத்தில் உள்ள கார்கா ஏரியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார், இருவர் காயமடைந்தனர். 

கடந்த 18 நாள்களில் வெவ்வேறு சம்பவங்களில் 144 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 214 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags : Kabul காபூல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT