இந்தியா

அருணாசலில் கடந்த 3 நாள்களாகப் புதிதாக கரோனா தொற்று இல்லை

22nd Mar 2021 11:41 AM

ADVERTISEMENT

 

அருணாசலில் கடந்த 3 நாள்களாகப் புதிதாக கரோனா தொற்று பதிவாகவில்லை என்று சுகாதாரத்துறை தெரித்துள்ளது. 

இந்தியாவில் ஒருசில மாநிலங்களில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது. 

இதனால் மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அருணாசலில் கடந்த 3 நாள்களாக புதிதாக யாருக்கும் தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் மொத்தம் 16,783 தொற்று பாதித்துக் குணமடைந்துள்ளனர். இதையடுத்து மீட்பு விகிதம் 99.64 ஆக உள்ளது. 56 பேர் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். 

ஞாயிறன்று 128 சோதனைகள் மேற்கொண்ட நிலையில் இதுவரை 4,11,821 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 62,784 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மாநில நோய்த் தடுப்பு அதிகாரி டாக்டர் டைமோங் பதுங் தெரிவித்துள்ளார். 
 

Tags : அருணாசல் கரோனா Arunachal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT