தேர்தல் காலத்தில் அதிகமாக வாகனச் சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், சரக்கு வாகனத்தில் மதுபானங்களைக் கடத்த புதிய வழியைக் கண்டுபிடித்த ஒரு கும்பல், சரக்கு வாகனத்தில் ஒரு ரகசிய அறையை உருவாக்கியுள்ளனர்.
ஒரு சரக்கு வாகனத்தை காவல்துறையினர் சோதனையிடுகிறார்கள். அது காலியாக இருக்கிறது. ஆனால், அதன் வாகன எண் பலகையை கழற்றி, அதற்குள் இருக்கும் ரகசிய அறையை திறக்கிறார்கள். அப்போது அந்த அறை முழுக்க மதுபானங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
மகிந்திரா நிறுவன தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, தனது சுட்டுரைப் பக்கத்தில் இது தொடர்பான விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம், இதுவரை இந்த ரகசிய அறை வடிவமைப்புத் தெரியாத அதிகாரிகளும் இது பற்றி தெரிந்து, இனி கவனத்துடன் வாகனச் சோதனையை நடத்தலாம். இனி காலியாக வரும் சரக்கு வாகனங்களை மட்டும் விட்டுவிடக் கூடாது என்பதும் புரிந்திருக்கும்.
வாகனங்களை தயாரிக்கும் போது, அதில் நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்தும் வகையில், ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்புக் குழுவினர் பல விஷயங்களை ஆராய்ந்து வடிவமைப்பு முடிவு செய்வார்கள். ஆனால் நிச்சயம் அந்த ஆராய்ச்சியாளர்களின் சிந்தனையில் கூட இந்த திட்டம் வந்திருக்காது என்றே, பலரும் அதில் கருத்துக் கூறியுள்ளனர்.