குஜராத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் சுமார் 1,128 தொழிலாளர்கள் இறந்துள்ளதாக மாநில சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மாநில சட்டமன்ற கேள்வி நேரத்தின்போது அமைச்சர் திலீப் தாக்கோர் கூறியதாவது,
மாநிலத்தில் 35.30 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அதில், 28.65 லட்சம் பேர் விவசாயத் துறையிலும், 6.65 லட்சம் பேர் கட்டுமானத் துறையிலும் உள்ளனர் என்று மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் திலீப் தாக்கோர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் விபத்துக்களில் இறந்த 1,128 தொழிலாளர்களில் 842 பேர் விவசாயத் துறையையும், 286 கட்டுமானத் துறையையும் சேர்ந்தவர்களாவர்.
அதிகபட்சமாக ஆனந்த் மாவட்டத்தில் 2.18 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களும், அகமதாபாத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்முறையாக இழப்பீடு வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தாகூர் கூறியுள்ளார்.