இந்தியா

கரோனா எதிரொலி: ஹோலி விற்பனையில் மந்தம்

22nd Mar 2021 01:34 PM

ADVERTISEMENT


லக்னௌ: நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஹோலிப் பண்டிகைக்காக வண்ணப் பொடிகள் உள்ளிட்டப் பொருள்களின் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.

வரும் வாரத்தில் ஹோலிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுவாக அதற்கு முந்தைய ஞாயிறுகளில் ஏராளமானோர் சந்தைகளுக்கு வந்து வண்ணப் பொடிகள் உள்ளிட்டவற்றை வாங்கிச் செல்வது வழக்கம்.

ஆனால், கரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஹோலிப் பண்டிகையை திட்டமிட்டபடி கொண்டாட முடியுமா என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்துள்ளதால், பலரும் சந்தைகளுக்கு வந்து வாங்குவதைக் குறைத்துக் கொண்டுள்ளனர்.

இது குறித்து ஹப்பூர் மொத்த விற்பனைச் சந்தை வியாபாரிகள் கூறுகையில், வழக்கமான அளவில் இல்லாமல் வண்ணப் பொடிகள், தண்ணீர் துப்பாக்கிகள் போன்றவற்றின் விற்பனை குறைந்துள்ளது.

ADVERTISEMENT

பப்படம் விற்பனை செய்யும் வியாபாரி, இந்த ஆண்டும் விற்பனை மந்தமாகவே இருப்பதாக கவலை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு விற்பனை குறைவுதான் என்கிறார்கள் சில வியாபாரிகள்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும், ஹோலிக்கு முந்தைய ஞாயிறுகளில் பயங்கர கூட்டமாகக் காணப்படும் சந்தைகளில் இந்த ஆண்டு மிகக் குறைவான மக்களே காணப்பட்டனர்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT