இந்தியா

மேற்கு வங்கத்தில் சிஏஏ அமல்படுத்தப்படுமா? சிதம்பரம் விமர்சனம்

22nd Mar 2021 04:23 PM

ADVERTISEMENT


மேற்கு வங்கத்தில் சிஏஏ அமல்படுத்தப்படும் என்று பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் திங்கள்கிழமை விமர்சித்தார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"மேற்கு வங்க தேர்தல் அறிக்கையில் பாஜகவின் உண்மை முகம் வெளிவந்துவிட்டது. ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்த பாஜக ஒப்புதல் அளிக்கும்.

சட்டத்துக்கு கட்டுப்படும் குடிமக்கள் மற்றும் லட்சக்கணக்கான ஏழை மக்கள் மனதில் அச்சத்தை உண்டாக்குவதே இதன் நோக்கம். தடுப்பு முகாம்களில் சிறையிலடைக்கப்படுவார்கள் என்று குறிப்பாக முஸ்லிம் மக்களை அச்சுறுத்துகின்றனர்.

ADVERTISEMENT

அசாம் மற்றும் மேற்கு வங்க மக்கள் மிகவும் உறுதியுடன் பாஜகவை மற்றும் விஷமத்தன திட்டங்களை வீழ்த்த வேண்டும். 

சிஏஏ நாட்டைப் பிரிக்கும், முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும்."

முன்னதாக, மேற்கு வங்கத்தில் பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். அதன்பிறகு பேசிய அவர் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே சிஏஏ அமல்படுத்தப்படும் எனக் கூறியிருந்தார்.

Tags : CAA
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT