இந்தியா

அசம்பாவிதம் ஏதுமற்ற அமர்நாத் யாத்திரைக்கு ஏற்பாடு: காஷ்மீர் காவல்துறை

22nd Mar 2021 03:35 PM

ADVERTISEMENT


ஸ்ரீநகர்: அசம்பாவிதம் ஏதுமற்ற அமர்நாத் யாத்திரைக்கு அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

அமர்நாத் யாத்திரை செல்லும் வழி முழுக்க சிசிடிவி கேமரா மற்றும் பறக்கும் டிரோன்களைக் கொண்டு கண்காணிப்பு என எந்தவிதமான அசம்பாவிதமும் இன்றி இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய காஷ்மீர் காவல்துறை ஐஜி விஜய்குமார், அமர்நாத் யாத்திரை செல்லும் பாதைகளில் 24 மணி நேர கண்காணிப்புப் போடப்படும். சோதனைச் சாவடிகளை அதிகரிப்பது, சில முகாம்களை மாற்றியமைப்பது போன்றவற்றையும் மேற்கொள்ளவிருக்கிறோம், தேர்தல் முடிந்த பிறகு மேலும் சில படைகளை இந்த பணிக்காக அழைக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இந்த முறை அமர்நாத் யாத்திரை வரும் பக்தர்களுக்கு எந்த சிக்கலும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT