நாடு முழுவதும் புதிதாக 46,951 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவற்றில், மகாராஷ்டிரம், பஞ்சாப், கா்நாடகம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் 84.49 சதவீத பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
திங்கள் காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 46,951 புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 30,535 பேரும், பஞ்சாபில் 2,644 பேரும், கேரளத்தில் 1,875 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.
இந்தியாவில் தற்போது 3,34,646 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 25 ஆயிரம் பேர் அதிகரித்துள்ளனர்.
நாட்டில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,11,51,468-ஆக (95.75 சதவீதம்) பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 21,180 போ் புதிதாகக் குணமடைந்துள்ளனா். கரோனாவுக்கு மேலும் 212 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.