மகாராஷ்டிரத்தில் புதிதாக 24,645 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை திங்கள்கிழமை 25 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
புதிதாக 24,645 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,04,327 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 58 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 53,457 ஆக உயர்ந்துள்ளது.
19,463 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 22,34,330 ஆக உயர்ந்துள்ளது.
அந்த மாநிலங்களிலுள்ள நகரங்களில் அதிகபட்சமாக மும்பையில் 3,262 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.