இந்தியா

இந்தியாவில்ஒரே நாளில் 28,903 பேருக்கு தொற்று; 131 பேர் பலி

17th Mar 2021 10:27 AM

ADVERTISEMENT


புதுதில்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 28,903 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 7-ஆவது நாளாக 20,000-க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கரோனா தொற்று அதிகரித்து வருவது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 2,34,406-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 28,903 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 1,14,38,734-ஆக அதிகரித்துள்ளது.

தொடா்ந்து 7-ஆவது நாளாக, புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,34,406-ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பா் 20-ஆம் தேதி தினசரி பாதிப்பு 26,624-ஆக இருந்தது.

ADVERTISEMENT

கரோனாவில் இருந்து 17,741 போ் குணமடைந்தனா். இவா்களுடன் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 1,10,45,284-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு மேலும் 188 போ் உயிரிழந்தனா். கரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,59,044 -ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 96.56 ஆக அதிகரித்துள்ளது, சிகிச்சை பெறுவோர் விகிதம் 2.05 ஆகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.39 ஆகவும் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) புள்ளிவிவரப்படி, செவ்வாய்க்கிழமை வரையிலும் நாடு முழுவதும் 22 கோடியே 92 லட்சத்து 49 ஆயிரத்து 784 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், செவ்வாய்க்கிழமை மட்டும் 9,69,021 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை வரையிலும் 3 கோடியே 50 லட்சத்து 64 ஆயிரத்து 536 பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்துகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன. 

புணேயில் உள்ள சீரம் நிறுவனத்திடம் இருந்து 10 கோடி கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. ஒரு தடுப்பூசி ஜிஎஸ்டி வரி உள்பட ரூ.157.50 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.

கொள்முதலுக்கான உத்தரவை சீரம் நிறுவனத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் சாா்பில் ஹெச்.எல்.எல். லைஃப்கோ் அரசு நிறுவனம் அனுப்பியுள்ளது. இதற்குரிய தொகை, மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து செலவிடப்படும். இதற்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசிகளுக்கான தொகை, பிஎம் கோ்ஸ் நிதியில் இருந்து அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT