இந்தியா

மேற்கு வங்க தேர்தல்: மேலும் 2 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

17th Mar 2021 09:40 PM

ADVERTISEMENT


மேற்கு வங்க பேரவைத் தேர்தலுக்கு மேலும் 2 வேட்பாளர்களை காங்கிரஸ் புதன்கிழமை அறிவித்தது.

மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதுவரை காங்கிரஸ் 92 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதில் ஃபல்தா மற்றும் கல்சினி ஆகிய தொகுதிகளில் முறையே காங்கிரஸ் தலைவர்கள் அப்துர் ரசாக் மற்றும் அவ்ஜித் நர்ஜினரி உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் அறிவித்தது. இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை 34 வேட்பாளர்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

மேற்கு வங்கத்தில் மார்ச் 27 தொடங்கி ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

Tags : west bengal
ADVERTISEMENT
ADVERTISEMENT