இந்தியா

அதிகரிக்கும் கரோனா பரவலால் போபாலில் போராட்டங்களுக்குத் தடை

16th Mar 2021 03:50 PM

ADVERTISEMENT

போபாலில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தற்காலிகத் தடை விதித்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி புதிதாக 199 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

மீண்டும் அதிகரிக்கத்துவங்கியிள்ள கரோனா பரவலால் போபால் மற்றும் இந்தூரில் போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் திருமணம், பொழுதுபோக்கு மற்றும் சமய வழிபாட்டு நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் பங்கேற்ற கட்டுப்பாடுகள் விதித்துள்ள போபால் அரசு இத்தகைய நிகழ்ச்சிகளில் அவசியம் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT