இந்தியா

எனக்கும் கட்சிக்கும் எதிராக பாஜகவினர் சதி செய்ய முயற்சி: மம்தா பானர்ஜி

16th Mar 2021 05:56 PM

ADVERTISEMENT

 

தனக்கும் தனது கட்சிக்கும் எதிராக சதி செய்ய பாஜக முயற்சி செய்து வருவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். 

மேற்குவங்க மாநிலம் பாங்குராவில் இன்று நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி,

விவசாயிகள் தலைநகர் தில்லியில் ஆறு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர், இருப்பினும் அமைச்சர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அனைத்து அமைச்சர்களும் மேற்குவங்க ஹோட்டல்களில் தங்கியுள்ளனர். 

ADVERTISEMENT

பாஜகவினர் என்னையும், எனது கட்சியையும் அழிக்க சதி செய்கின்றனர். தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் திரிணமூலுக்கு எதிராக வழக்குகளை எவ்வாறு பதிவு செய்வது என ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது பெயரில் ஒரு அரங்கத்தை உருவாக்குகிறார். ஒரு சாலையை உருவாக்குகிறார். அதன்பிறகு, இந்த நாட்டிற்கே அவரது பெயரை சூட்டுவார். 

பாஜக தலைமையிலான அரசு முதலில் தில்லியை கட்டுப்படுத்தட்டும்; அதன்பிறகு வங்காளத்தை கட்டுப்படுத்தட்டும் என்று பேசினார். 

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை எட்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும். 

Tags : west bengal
ADVERTISEMENT
ADVERTISEMENT