இந்தியா

சிரோமணி அகாலிதளம் கட்சித் தலைவருக்கு கரோனா பாதிப்பு

16th Mar 2021 06:24 PM

ADVERTISEMENT

சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாடு முழுவதும் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாள்களாக கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதலுக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

 

ADVERTISEMENT

இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “கரோனா உறுதியாகியுள்ளது. எனினும் உடல்நிலை நலமுடன் உள்ளது. தற்போது தனிமையில் உள்ளேன்” என தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT