நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 17-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.
காணொலி வாயிலாக நடைபெறும் ஆலோனைக் கூட்டம் காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் மாநில முதல்வர்களிடமிருந்து கள நிலவரம் குறித்து கருத்துகள் கேட்கப்படவுள்ளன. அதன் அடிப்படையில் கரோனா பரவலைத் தடுக்க வியூகங்கள் வகுக்கப்படவுள்ளன.
கடந்த காலங்களிலும் கரோனா தொற்று தீவிரமாக இருந்த நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி கரோனாவைத் தடுப்பதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.