இந்தியா

உ.பி.யில் நிலத்தகராறு: விவசாயி அடித்துக்கொலை

13th Mar 2021 03:27 PM

ADVERTISEMENT


உத்தரப் பிரதேசத்தில் நிலத்தகராறு காரணமாக விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் புடான் மாவட்டத்தில் வசித்து வந்தவர் விவசாயி சத்யா வீர். 65 வயதான அவர் இன்று (மார்ச் 13) அதிகாலை தனது கால்நடைகளுக்கு தீவனம் வைப்பதற்காகச் சென்றுள்ளார்.

பின்னர் அவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மேற்கொண்ட விசாரணையில், விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட விவசாயி சதயா வீருக்கும், அவரது உறவினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த உறவினர் விவசாயியை அடித்துக்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

பாதிக்கப்பட்டவர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT