இந்தியா

இனியாவது விழித்துக் கொள்வோம்: 2021-ல் அதிகபட்ச ஒருநாள் கரோனா பாதிப்பு

13th Mar 2021 12:26 PM

ADVERTISEMENT

புது தில்லி: நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 24,882 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டில் பதிவான அதிகபட்ச ஒரு நாள் பாதிப்பு இதுவாகும்.

அது மட்டுமல்ல, கடந்த 83 நாள்களில் பதிவான அதிகபட்ச கரோனா பாதிப்பும் இதுவாகும். கடைசியாக டிசம்பர் 20-ஆம் தேதிதான் 26,624 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு மெல்ல குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் 24,882 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்பவர்களின் எண்ணிக்கையும் 2,02,022 ஆக அதிகரித்துள்ளது. இது ஒட்டு மொத்த பாதிப்பில் 1.74 ஆகும். அதுபோலவே குணமடைபவர்களும் 96.82 சதவீதமாகக் குறைந்துள்ளனர்.

நல்ல தகவலாக, கரோனாவுக்கு பலியாவோர் விகிதம் 1.40 சதவீதமாகவே நீடிக்கிறது.

ADVERTISEMENT

சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 24,882 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. . அதே காலகட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 140 போ் உயிரிழந்தனா். இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,13,33,728-ஆக அதிகரித்தது

இதுவரை நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,58,446 போ் உயிரிழந்தனா். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,09,73,260 போ் குணமடைந்தனா்.  நாட்டில் தற்போது 2,02,022 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி நாட்டில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டியது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சமாகவும், செப்டம்பர் 5-இல் 40 லட்சமாகவும், செப்டம்பர் 16-இல் 50 லட்சமாகவும் அதிகரித்தது.

செப்டம்பர் 28ல் இது 60 லட்சமாகவும், அக்டோபர் 11ல் 70 லட்சமாகவும், அக்டோபர் 29ல் 80 லட்சமாகவும், நவம்பர் 20-ல் 90 லட்சமாகவும், டிசம்பர் 19-இல் ஒரு கோடியாகவும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT