இந்தியா

வார இறுதி நாள்கள் முழு முடக்கம்: மகாராஷ்டிரத்தில் அமலானது

13th Mar 2021 10:46 AM

ADVERTISEMENT


மகாராஷ்டிர மாநிலத்தில் வார இறுதி நாள்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்றும், நாளையும் முழு முடக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு சில மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் சுகாதாரக் குழுவினர் தொற்று அதிகமுள்ள மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். 

மத்தியக் குழு மாநில சுகாதாரத்துறையினருடன் இணைந்து கரோனா அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து தொற்றைக் குறைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் பரவி வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக, வார இறுதி நாள்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் முழு முடக்கம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT