இந்தியா

கரோனா தடுப்பூசிக்காக வரிசையில் காத்திருந்த முதியவர் மரணம்

13th Mar 2021 04:19 PM

ADVERTISEMENT

மும்பையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்ய வரிசையில் காத்திருந்த 65 வயது முதியவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகேவுள்ள நலசோப்பரா பகுதியில் கரோனா தடுப்பூசி மையம் செயல்பட்டு வருகிறது.

இதற்காக பதிவு செய்ய வந்திருந்த 65 வயதுமுதியவர் வரிசையில் காத்திருந்தார். அப்போது திடீரென முதியவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ADVERTISEMENT

நேற்று (மார்ச் 13) காலை 9.30 மணி முதல் வரிசையில் காத்திருந்த நிலையில் பிற்பகல், அவர் சோர்வாக உணர்ந்துள்ளார். எனினும் வரிசையில் தொடர்ந்து நின்றுகொண்டிருந்ததால் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT