இந்தியா

வேட்பாளர்களை இறுதி செய்ய பாஜக மத்திய தேர்தல் குழு கூடியது

13th Mar 2021 08:45 PM

ADVERTISEMENT


பேரவைத் தேர்தல்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்ய பாஜக மத்திய தேர்தல் குழு கூடியுள்ளது.

கட்சித் தலைமையகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். 

தமிழகம், கேரளம், புதுச்சேரி வேட்பாளர்கள் மற்றும் மேற்கு வங்கம், அசாமில் மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இந்தக் கூட்டத்தில் இறுதி செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களிலிருந்து முக்கியத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT