இந்தியா

12-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலைகள்

11th Mar 2021 10:49 AM

ADVERTISEMENT

 

சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை தொடர்ந்து 12-வது நாளாக மாற்றமின்றி ரூ.93.11-க்கும் டீசல் ரூ.86.45-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.91.17 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.91.35 ஆகவும், அதிகபட்சமாக மும்பையில் 97.57 ஆகவும் உள்ளது.

டீசல் விலை ஒரு லிட்டருக்கு புது தில்லியில் ரூ.81.47 ஆகவும் கொல்கத்தாவில் ரூ.84.35 ஆகவும் சென்னையில் ரூ.86.45 ஆகவும் மும்பையில் ரூ.88.60 ஆகவும் உள்ளது.

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு கண்டு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த நிலையில், நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், மக்களின் வாக்குகளைக் கவரும் வகையில் வரிகளை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்ற நிலையில், சுமார் 12 நாள்களாக பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றமின்றி காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்துக்கு ஏற்ப, இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.

உள்நாட்டில் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி மூலமாகவே பூா்த்தி செய்யப்படுகிறது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது இந்திய எண்ணெய் நிறுவனங்களும் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய, மாநில அரசுகளின் வரி விகிதம் ஒரு லிட்டா் பெட்ரோல் விற்பனையில் 60 சதவீதமாகவும், டீசல் விற்பனையில் 54 சதவீதமாகவும் உள்ளன.

Tags : petrol diesel
ADVERTISEMENT
ADVERTISEMENT