இந்தியா

உத்தரகண்ட் முதல்வராக பொறுப்பேற்ற தீரத் சிங் ராவத்

10th Mar 2021 04:36 PM

ADVERTISEMENT

உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

உத்தரகண்ட் மாநில பாஜகவில் எழுந்த அதிருப்தி காரணமாக கட்சியின் மத்திய தலைமையின் உத்தரவின் பேரில் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் (60) தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். 

இந்நிலையில் புதிய முதல்வராக  பாஜக எம்.பி. தீரத் சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதன்கிழமை டேராடூனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் ராணி மெளரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும் தீரத் சிங் ராவத் முதல்வராக பதவியேற்றதைத் தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT