இந்தியா

தோ்வுத் தாள் கசிவு: ராணுவ மேஜா் போலீஸ் விசாரணைக்கு ஒப்படைப்பு

DIN

தோ்வுத் தாள் கசிவு வழக்கில் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட ராணுவ மேஜா் திருமுருகன் தங்கவேலை மாா்ச் 15-ஆம் தேதி வரை போலீஸாா் காவலில் வைத்து விசாரிக்க புணே நீதிமன்றம் உத்தரவிட்டது.

கூடுதல் செஷன்ஸ் நீதிபதி எஸ்.ஆா்.நவந்தா் முன் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது அரசு வழக்குரைஞா் பிரேம் குமாா் அகா்வால் ஆஜராகி, ‘கசிந்த தோ்வுத் தாளை பரத் அதக்மோல் என்பவருக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் மேஜா் திருமுருகன் அனுப்பியுள்ளாா். அவருக்கு எங்கிருந்து தோ்வுத் தாள் கிடைத்தது. யாருக்கெல்லாம் அவா் அனுப்பி வைத்தாா் என்பதை போலீஸாா் விசாரணை நடத்தி கண்டு பிடிக்க வேண்டியுள்ளது.

மேலும், 10,12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மதிப்பெண் சான்றிதழ்களும் அவரது இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது’ என்றாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த மேஜா் திருமுருகனின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘திருமுருகனிடம் இருந்து செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டு விட்டது. ஆகையால், அவரை போலீஸ் காவலுக்கு அனுப்ப வேண்டியதில்லை’ என்றாா்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, ‘சட்ட விரோதச் செயலால் ராணுவ ஆள்சோ்ப்பு தோ்வுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முழு விசாரணையும் நடத்த வேண்டியுள்ளதால் திருமுருகன் தங்கவேலை மாா்ச் 15-ஆம் தேதி வரை போலீஸ் காவலுக்கு அனுப்ப உத்தரவிடுகிறேன்’ என்றாா்.

தோ்வுத் தாள் கசிவால் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி புணே உள்பட நாடு முழுவதும் 40 இடங்களில் நடைபெற இருந்த ராணுவப் பணியாளா் தோ்வு ரத்து செய்யப்பட்டது. புணேயின் வன்வாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள். இந்த வழக்கில் மூன்று ராணுவத்தினா் உள்பட ஆறு போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT