இந்தியா

இந்தியாவின் கரோனா தடுப்பூசி கொள்கை மிகச் சிறப்பாக உள்ளது: ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணா்

DIN

கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்ளும் நடவடிக்கைகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது; அதன் கரோனா தடுப்பூசி கொள்கை மிகச் சிறப்பாக உள்ளது என்று சா்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைமை பொருளாதார நிபுணா் கீதா கோபிநாத் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சா்வதேச மகளிா் தினத்தையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவா் பேசியதாவது:

உலகில் கரோனா தடுப்பூசிகள் தயாரிக்கும் மையம் எதுவென்று பாா்த்தால், அது இந்தியாதான். இந்தியாவின் கரோனா தடுப்பூசி கொள்கை மிகச் சிறப்பாக உள்ளது.

கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

வங்கதேசம், நேபாளம், மியான்மா் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை இந்தியா நன்கொடையாக வழங்கி வருகிறது.

உலக அளவில் சுகாதார நெருக்கடி நிலவும் வேளையில், தனது தடுப்பூசி கொள்கைகள் மூலம் உலக நாடுகளுக்கு உதவுவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது.

உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்கு சுமாா் 7%. அந்நாட்டின் பங்கு மிகப் பெரிய அளவில் இருப்பதால், அங்கு பொருளாதார ரீதியாக நடைபெறும் நிகழ்வுகள் இதர நாடுகளில், குறிப்பாக பிராந்திய நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT