இந்தியா

தெலங்கானாவில் 90 லட்சத்தைத் தாண்டியது கரோனா பரிசோதனை

IANS

தெலங்கானாவில் கரோனா தொற்று தொடங்கியதிலிருந்து இதுவரை 90 லட்சம் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளதாகச் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், 

கடந்த 24 மணி நேரத்தில் 32,189 சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், இதுவரை நாட்டில் ஒட்டுமொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 90,16,741 ஆக உயர்ந்ததுள்ளது. 
 
அரசு ஆய்வகங்களில் சோதனைகள் நடத்தத் தொடங்கிக் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. கடந்தாண்டு மே மாதம் தெலங்கானா உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் தனியார் ஆய்வகங்களுக்குச் சோதனைகளை நடத்த அரசு அனுமதித்தது. 

தற்போது 20 அரசு மற்றும்60 தனியார் ஆய்வகங்களில் ஆர்டி-பிசிஆர்/சிபிஎன்ஏஏடி/ட்ரூநட் போன்ற சோதனைகளை நடத்தி வருகின்றன. அதேநேரத்தில் விரைவான ஆன்டிஜென் சோதனைக்கு 1076 மையங்கள் உள்ளன. 

இந்த ஆய்வகங்களில் நாளொன்றுக்கு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் சோதனைகள் செய்யப்படுகின்றன. சோதனைகளில் பெரும்பாலும் விரைவான ஆன்டிஜென் சோதனைகள் ஆகும். 

கடந்த 24 மணி நேரத்தில் 29,759 மாதிரிகள் அரசு ஆய்வகங்களிலும், மீதமுள்ள 2,430 தனியார் ஆய்வகங்களிலும் சோதனை செய்யப்பட்டன. 

மேலும், ஒரேநாளில் 142 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன நிலையில், மொத்த பாதிப்பு 3,00,153 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதித்து 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,644 ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 178 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 2,96,7,40 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT