இந்தியா

கொல்கத்தா தீ விபத்து: 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் பலி

PTI


கொல்கத்தாவில் கிழக்கு ரயில்வே மற்றும் தென்கிழக்கு ரயில்வே அலுவலகங்கள் அமைந்துள்ள பல அடுக்கு மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் நேரிட்ட தீ விபத்தில் 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் பலியாகினர்.

கொல்கத்தாவில் திங்கள்கிழமை இரவு புதிய கொயிலாகத் கட்டம் என்ற பல அடுக்குமாடிக் கட்டடத்தின் 13-வது மாடியில் தீ விபத்து நேரிட்டது.

இந்த தீ விபத்தில், தீயைக் கட்டுப்படுத்த வந்த 4 தீயணைப்பு வீரர்கள், ஒரு ரயில்வே அதிகாரி, ஆர்பிஎஃப் தலைமைக் காவலர், உதவி துணை ஆய்வாளர் என 9 பேர் பலியாகினர். மீட்புப் பணியில் ஈடுபட்ட மேலும் சில வீரர்கள் காணாமல் போயிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தற்போது கட்டடத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டு, கட்டடம் முழுக்க குளிரூட்டும் பணி நடைபெற்று வருகிறது.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

பலியானவர்கள் அனைவரும், கட்டடத்தின் மின்தூக்கியில் செல்லும் போது, அதில் சிக்கி பலியாகியுள்ளனர். இந்த கட்டடத்தின் வரைபடம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. ரயில்வேக்கு சொந்தமான கட்டடம் என்றாலும், தீ விபத்து நடந்த போது மூத்த ரயில்வே அதிகாரிகள் ஒருவர் கூட இங்கு வரவில்லை. ஒரு வேளை இந்த விபத்தில் ஏதேனும் அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை என தீயை கட்டுப்படுத்தும் பணியை நள்ளிரவு வரை நேரில் பார்வையிட்ட முதல்வர் மம்தா கூறியுள்ளார்.

அதேவேளையில், தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT