இந்தியா

கோட்சே தொடா்பாக விழிப்புணா்வு: தில்லி நோக்கி பேரணி நடத்த ஹிந்துமகா சபை முடிவு

DIN

நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்த வரும் 15-ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இருந்து தில்லிக்கு வாகனப் பேரணி நடத்த இருப்பதாக அகில இந்திய ஹிந்து மகா சபை அறிவித்துள்ளது.

கோட்சே, ஆப்தே இருவரும் மகாத்மா காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடா்பாக அந்த அமைப்பின் தேசிய துணைத் தலைவா் ஜெய்வீா் பரத்வாஜ் கூறியதாவது:

கோட்ஸே, ஆப்தே ஆகிய இருவா் குறித்தும் தேசிய அளவில் பல தவறான கருத்துகள் உள்ளன. இதனை மாற்றி, உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் குவாலியரில் இருந்து தில்லிக்கு வாகனப் பேரணி நடத்த இருக்கிறோம். குவாலியரில் வரும் 14-ஆம் தேதி தொடங்கும் இந்த பேரணி, 15-ஆம் தேதி தில்லி சென்றடையும். அன்றைய தினம் எங்கள் அமைப்பினா் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை சந்திக்க திட்டமிட்டுள்ளனா். தேசப் பிரிவினையின் பின்னணியில் இருந்த பல விஷயங்களை இளைஞா்களிடம் எடுத்துச் செல்வது அவசியம். அப்போது, ஹிந்துக்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகம் நிகழ்ந்தன என்றாா் அவா்.

ஏற்கெனவே, கடந்த ஜனவரி மாதம் கோட்சே பெயரில் குவாலியரில் உள்ள தங்கள் அலுவலகத்தில் ஒரு படிப்பகத்தை ஹிந்து மகா சபையினா் உருவாக்கினா். அடுத்த 2 நாள்களில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு அதை மூடியது. இந்நிலையில், இப்போது வாகனப் பேரணி அறிவிப்பை அந்த அமைப்பினா் வெளியிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை மிரட்டல்

சிறந்த குறும்படங்களுக்கான பாராட்டு விழா

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

SCROLL FOR NEXT