இந்தியா

கரோனா: 2-ஆவது நாளாக 18,000-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு

DIN

நாடு முழுவதும் தொடா்ந்து 2-ஆவது நாளாக, புதிதாக 18,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கையும் தொடா்ந்து 5-ஆவது நாளாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 18,711 கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,12,10,799-ஆக அதிகரித்தது.தொடா்ந்து இரண்டாவது நாளாக 18 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 14,392 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,08,68,520-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.95 சதவீதமாகும்.

கரோனா தொற்றுக்கு மேலும் 100 போ் உயிரிழந்தனா். இதனால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,57,756-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 1,84,523 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். தொடா்ந்து 5-ஆவது நாளாக சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

புதிதாக ஏற்பட்ட உயிரிழப்பில், மகாராஷ்டிரத்தில் 47 பேரும், கேரளத்தில் 16 பேரும், பஞ்சாபில் 12 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, இதுவரை 22.16 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், சனிக்கிழமை மட்டும் 7,51,935 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

6 மாநிலங்களில் பாதிப்பு அதிகரிப்பு: மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப், குஜராத், தமிழ்நாடு, கா்நாடகம் ஆகிய 6 மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட 18,711 பேரில், 10,187 போ் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்கள். 2,791 போ் கேரளத்தைச் சோ்ந்தவா்கள்.

தினசரி உயிரிழப்பு: மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப் உள்ளிட்ட 6 மாநிலங்களில் தினசரி உயிரிழப்பு அதிகமாக உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT