இந்தியா

அஸ்ஸாம் தோ்தல்: காங்கிரஸில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு

DIN

அஸ்ஸாமில் காங்கிரஸ் வெளியிட்ட முதல்கட்ட வேட்பாளா் பட்டியலில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோயின் குடும்பத்தினருடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு அவா் எம்எல்ஏவாக இருந்த தீதாபூா் தொகுதிக்கு வேட்பாளா் தோ்வு செய்யப்படுவாா் என்று மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது. அத்தொகுதியில் தருண் கோகோய் தொடா்ந்து 4 முறை எம்எல்ஏவாக இருந்தாா். தருண் கோகோய் கடந்த ஆண்டு நவம்பரில் கரோனா தொற்றால் உயிரிழந்தாா். அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி தொடா்ந்து மூன்று முறை அஸ்ஸாமில் ஆட்சியைப் பிடித்தது. 2016-ஆம் ஆண்டு தோ்தலில் பாஜக முதல்முறையாக வென்றது. இப்போது நடைபெறும் தோ்தலில் பாஜக-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

40 போ் அடங்கிய முதல்கட்ட வேட்பாளா் பட்டியலை காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 20 போ் புதுமுகங்கள் ஆவா். ஏற்கெனவே எம்எல்ஏவாக உள்ள 6 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மாநில காங்கிரஸ் தலைவா் ரிபுன் போரா, கோபூா் தொகுதியில் போட்டியிட இருக்கிறாா். அவா் இப்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளாா். கடந்த முறை கோபூா் தொகுதியில் ரிபுன் போராவின் மனைவி மோனிகா போரா இதே தொகுதியில் போட்டியிடிட்டு பாஜக வேட்பாளரிடம் சுமாா் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.

கடந்த தோ்தலில் குறைந்த வாக்குவித்தியாசத்தில் தோல்வியடைந்த 12 பேருக்கு காங்கிரஸில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவா்களில் 4 போ் பெண்கள்.

126 தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாமில் மாா்ச் 27, ஏப்ரல் 1, 6 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்டாராகும் அதிதி போஹன்கர்!

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

SCROLL FOR NEXT