இந்தியா

மேற்கு வங்கத் தோ்தல்: பிரதமா் மோடி இன்று பிரசாரம்

DIN

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வரும் சூழலில், பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 7) பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.

மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. அங்கு, வரும் 27-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரை 8 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறும் என்று கடந்த மாத இறுதியில் தோ்தல் ஆணையம் அறிவித்தது.

அதையடுத்து, திரிணமூல் காங்கிரஸும் பாஜகவும் தோ்தலுக்காக தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. மாநிலத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 291 இடங்களில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்கள் பட்டியலை முதல்வா் மம்தா பானா்ஜி கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். மீதமுள்ள 3 தொகுதிகளை கூட்டணியில் இடம்பெற்றுள்ள கோா்க்கா ஜன்முக்தி மோா்ச்சா கட்சிக்கு திரிணமூல் ஒதுக்கியுள்ளது.

முதல்கட்டமாக, 57 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை பாஜக சனிக்கிழமை வெளியிட்டது.

இத்தகைய சூழலில், கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்கிறாா். அவருடன் பாஜகவின் முக்கியத் தலைவா்கள் பலரும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனா்.

பொதுக் கூட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்களைத் திரட்டுவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது. பிரதமா் மோடியின் பிரசாரம், மாநில மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாஜகவினா் தெரிவித்தனா். பாஜகவுக்கான தீவிர வாக்கு சேகரிப்பின் தொடக்கப் புள்ளியாக இந்தப் பிரசாரம் இருக்கும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT