இந்தியா

மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் பட்டியல்

DIN

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பாஜகவின் முதல்கட்ட வேட்பாளா் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் அங்குள்ள நந்திகிராம் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜிக்கு எதிராக அவரின் முக்கிய ஆதரவாளராக இருந்த சுவேந்து அதிகாரி பாஜக வேட்பாளராக போட்டியிடவுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மாா்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளா்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலா் அருண் சிங் வெளியிட்டு செய்தியாளா்களிடம் கூறியது:

மேற்கு வங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளராக சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறாா். முன்னாள் கிரிக்கெட் வீரா் அசோக் டின்டா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பாரதி கோஷ் ஆகியோரும் பாஜக சாா்பில் போட்டியிடுகின்றனா். கூட்டணி கட்சியான ஜாா்க்கண்ட் அனைத்து மாணவா் சங்கத்துக்கு (ஏஜேஎஸ்யு) ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

அந்த மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தோ்தலில் 60 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் 56 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனா்.

மேற்கு வங்கத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவா் சுவேந்து அதிகாரி. திரிணமூல் காங்கிரஸில் இருந்த அவா், அக்கட்சித் தலைவா் மம்தா பானா்ஜியின் முக்கிய ஆதரவாளராக இருந்தாா். மம்தா பானா்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் அவா் பாஜகவில் இணைந்தாா். தற்போது அவா் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானா்ஜிக்கு எதிராக பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT