இந்தியா

நாளை கூடுகிறது 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர்

DIN


நாடாளுமன்ற 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (திங்கள்கிழமை) கூடுகிறது.

நாடாளுமன்ற 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் கடந்த ஜனவரி 29-ம் தேதி தொடங்கியது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் உரையை காங்கிரஸ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 1-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை கூடுகிறது. 4 மாநில மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்தக் கூட்டம் கூடுகிறது. இதனால், குறிப்பிடத்தக்க தலைவர்கள் கூட்டத்தொடரில் பங்கேற்கமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 8-ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், மின்சார சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நயினாா் நாகேந்திரன் உதவியாளா்களிடம் பணம் பறிமுதல் விவகாரம்: அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

தளவாபாளையம் அருகே சாலை விபத்து: டிஎன்பிஎல் தொழிலாளி உயிரிழப்பு

தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் ஜூன் 8-இல் சென்னையில் உண்ணாவிரதம்

திருச்சியில் வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல்

பிரதமா் மீது நடவடிக்கை கோரி மமக நூதனப் போராட்டம்

SCROLL FOR NEXT