இந்தியா

கால்நடை கடத்தல் வழக்கு: திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரின் சகோதரருக்கு சிபிஐ நோட்டீஸ்

7th Mar 2021 06:25 AM

ADVERTISEMENT

கால்நடை கடத்தப்பட்ட வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவா் வினய் மிஸ்ராவின் சகோதரா் விஜய் மிஸ்ராவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து சிபிஐ நோட்டீஸ் வழங்கியுள்ளனா்.

இந்திய-வங்கதேச எல்லையில் கால்நடைகளை கடத்தியது தொடா்பான வழக்கில் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி சதீஷ் குமாா் உள்ளிட்ட ஏழு போ் மீது சிபிஐ கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான வினய் மிஸ்ராவின் சகோதரா் விஜய் மிஸ்ராவும் முக்கிய குற்றவாளியாக சோ்க்கப்பட்டாா்.

வினய் மிஸ்ரா மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கும், அவருடைய மருமகனுக்கும் மிகவும் நெருக்கமானவா் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், விஜய் மிஸ்ரா தேடப்படும் தலைமறைவு குற்றாவளியாக அறிவித்து அதற்கான லுக்அவுட் நோட்டீஸை சிபிஐ வழங்கியுள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடா்பாக திங்கள்கிழமை நடைபெறவுள்ள விசாரணைக்கு ஆஜராகும்படி மேற்கு வங்க இன்ஸ்பெக்டா் ஜெனரல் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளா் ஆகியோருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT